141
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அணுத் திட்டம் குறித்த யோசனைகளுக்கு ஈரான் இணக்கம் வெளியிட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது. உலக முக்கிய நாடுகளினால் முன்மொழியப்பட்டுள்ள பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ள ஈரான் அரசாங்கம் இணங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
ஈரானுக்கும் உலக நாடுகளுக்கும் இடையில் ஒப்பந்தமொன்றை செய்து கொள்வது குறித்த யோசனை திருப்தி அளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக சர்வதேச அணு முகவர் நிறுவன பணிப்பாளர் நாயகம்Yukiya Amano தெரிவித்துள்ளார். ஈரானிய அணுத் திட்டத் தலைவர் அலி அக்பரை சந்தித்ததன் பின்னர் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love