நேற்றையதினம் பெய்த கன மழை காரணமாக, முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் முறிப்புப் பகுதியும் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிழவிக்கப்பட்டுள்ளது
முறிப்புக்குளத்தின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதுடன், ஆற்றின் நீர் மட்டமும் உயர்வடைந்துள்ளதனால் முறிப்புப் பகுதியில் அமைந்துள்ள பால்பண்ணைக் கிராமத்தினுள் நீர் உட்புகுந்துள்ளது.
இதனையடுத்து காவல்துறையினர் இராணுவத்தினர், அனர்த்த முகாமைத்துவப்பிரிவினர் மற்றும் சமூக அமைப்புகளின் உதவியுடன், அப்பகுதியில் வசிக்கின்ற 35 குடும்பங்களைச் சேர்ந்த 108பேர் முறிப்பு அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
அத்துடன் முல்லைத்தீவு மற்றும் இரணைமடு பகுதிகளில் வெள்ளத்தில் சிக்குண்டவர்களை மீட்க்கும் பணிகளில், இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான 212 ஹெலிக்கொப்டர்கள் மற்றும் வை12 ரக வானூர்திகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என விமானப்படை அறிவித்துள்ளது.