Home இந்தியாஅணு ஆயுதங்களை சுமந்து சென்று இலக்கை தாக்கும் அக்னி-ஐஏ ஏவுகணை சோதனை…

அணு ஆயுதங்களை சுமந்து சென்று இலக்கை தாக்கும் அக்னி-ஐஏ ஏவுகணை சோதனை…

by admin


ஒடிசா அப்துல் கலாம் தீவில் இருந்து அணு ஆயுதங்களை சுமந்து சென்று இலக்கை தாக்கும் அக்னி-ஐஏ ஏவுகணை சோதனை செய்யப்பட்டது. ஒடிசாவின் அப்துல்கலாம் தீவில் அக்னி-ஐஏ ஏவுகணை பரிசோதனை ஒடிசா மாநில கடலோர மாவட்டமான சண்டிபூர் பலசோரில் முன்னாள் ஜனாதிபதி மற்றும் விஞ்ஞானியான ஏபிஜே அப்துல் கலாம் தீவில் இருந்து ஏவுகணைகள் பரிசோதனை செய்யப்படும். இங்குள்ள ஒருங்கிணைந்த சோதனை மையத்தின் 4-வது தளத்தில் இருந்து இன்று காலை 8.30 மணியளவில் அக்னி-ஐஏ ஏவுகணை விண்ணில் ஏவி பரிசோதனை செய்யப்பட்டது. இந்த ஏவுகணை கண்டம்விட்டு கண்டம் பாய்ந்து எதிரிகளின் இலக்கை துல்லியமாக தாக்கும் ஆற்றல் வாய்ந்தது என்பதுடன் அணுஆயுதங்களையும் சுமந்து சென்று தாக்கும் வல்லமை படைத்தது என்பது கறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More