பிரபல ஈரானிய தொழிலதிபர் ஒருவர் லஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட நிலையில் தூக்கிலிடப்பட்டுள்ளார். 49 வயது டர்மானி என்னும் தொழிலதிபரே இவ்வாறு துக்கிலிடப்பட்டுள்ளார்.
கடன் பெறுவதற்காக போலி ஆவணம் தயாரித்த குற்றச்சாட்டு நிரூபணமானதால் இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பிடுமென் என்னும் எண்ணெய் சார்ந்த ஒரு பொருளை கொள்வனவு செய்வதற்காக அவர் போலியாக நிறுவனங்களின் பெயரில் ஆவணம் தயாரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . இந்த ஆண்டு ஊழல் தடுப்பு அமைப்பு உருவாக்கப்பட்டதிலிருந்து தூக்கிலடப்பட்ட மூன்றாவது தொழிலதிபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த மாதம் உள்ளூர் சந்தையை தன்னுடைய ஆதாயத்திற்காக பயன்படுத்தி கொள்வதற்காக, இரண்டாயிரம் கிலோ தங்க நாணயங்களை பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டுக்காக தங்க நாணயங்களின் சுல்தான் தூக்கிலிடப்பட்டிருந்தார்.