ஜனாதிபதி தேர்தலில் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவையே ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடச் செய்ய எதிர்ப்பார்துள்ளதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். இதேவேளை சுதந்திரக் கட்சி மற்றும் பொதுஜன பெரமுன சார்பில் மைத்திரிபால சிறிசேனவை வேட்பாளராக போட்டியிடச் செய்யும் முயற்சிகளும் இடம்பெறுகின்றன.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவையே தேர்தலில் இறக்க தீர்மானித்துள்ளதாகவும் தேர்தல் நெருங்கி வரும்போது, கலந்தாலோசித்து வெற்றி பெறக்கூடிய ஒருவரை வேட்பாளராக நியமிக்கப்படும் என்றும் லக்ஷ்மன் கிரியெல்ல கூறியுள்ளார். இந்த விடயம் அது குறித்து யாரும் அச்சம் கொள்ளத்தேவையில்லை என்றும் தம்முடன் போட்டியிடுவது, மொட்டா அல்லது சுதந்திரக் கட்சியா என்பதிலேயே பிரச்சினை இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த முறை பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தப்போவதில்லை என்றும் ஐக்கிய தேசியக் கட்சியில் வெற்றியீட்டும் பல தலைவர்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக அரசியல் சூழ்ச்சியின் பின்னர் பல தலைவர்கள் உருவாகியிருப்பதாகவும் தெரிவித்தார். இதேவேளை எதிர்வரும் மார்ச் மாதத்தில் தேர்தலை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தேர்தலில் பொதுவேட்பளராக மைத்திரிபால சிறிசேனவை போட்டியிடச் செய்வது தொடர்பில் சுதந்திரக் கட்சிக்கும் பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுகின்றது. இது தொடர்பில் ஜனாதிபதியின் ஆலோசகர் சிரால் லக்திலகவும் பாராளுமன்ற உறுப்பினர் மாலித் ஜெயதிலகவும் பொதுஜன பெரமுனவின் பசில் ராஜபக்சவுடன் பேச்சுக்களை மேற்கொண்டுள்ளதாகவும் கொழும்பு தமிழ் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.