Home இலங்கைஒரு மாதத்திற்குள் அமைச்சுப் பதவி, இல்லையேல் தீர்மானம் எடுக்கப்படும்…..

ஒரு மாதத்திற்குள் அமைச்சுப் பதவி, இல்லையேல் தீர்மானம் எடுக்கப்படும்…..

by admin


ஒரு மாத காலத்திற்குள் தனக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவி கிடைக்காவிட்டால் தான் தீர்மானம் ஒன்றை எடுக்க உள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

ஆடிகம, சியம்பலாவெவ பிரதேசத்தில் கம்பெரலிய வேலைத்திட்டத்தின் கீழ் மக்களுக்கு உதவிப் பொருட்களை வழங்கி வைக்கும் நிகழ்வில் கலவந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர், ஐக்கிய தேசிய கட்சியில் ஏற்பட்ட திருப்புமுனைக்கு தானே காரணம் என்ற போதிலும் தனக்கு எவ்வித அங்கீகாரமும் கிடைக்கவில்லை என்றும், அமைச்சரவை நியமிக்கப்பட்டு சில வாரங்கள் ஆகியுள்ள போதிலும் தனக்கு அமைச்சுப் பதவி கிடைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More