Home உலகம்ஜப்பான் வணிக ரீதியில் திமிங்கிலங்களை வேட்டையாடுவதை ஆரம்பிக்கவுள்ளது

ஜப்பான் வணிக ரீதியில் திமிங்கிலங்களை வேட்டையாடுவதை ஆரம்பிக்கவுள்ளது

by admin


வணிக ரீதியில் திமிங்கிலங்களை வேட்டையாடுவதை ஜூலை மாதம் முதல் ஆரம்பிக்கவுள்ளதாக ஜப்பான் தெரிவித்துள்ளது. அதற்கு முன்னர் திமிங்கிலங்களைப் பாதுகாப்பதனை நோக்கமாக கொண்டு செயற்படும் சர்வதேச திமிங்கிலப் பிடிப்பு ஆணையகத்திலிருந்து ஜப்பான் வெளியேறியுள்ளது.

சில திமிங்கில இனங்கள் கிட்டத்தட்ட முற்றிலும் அழியும் நிலைக்கு வந்தநிலையில் வணிக ரீதியில் திமிங்கிலங்களைப் பிடிப்பதனை கடந்த 1986 ஆம் ஆண்டு இந்த ஆணையகம் தடை செய்திருந்தது.

1951-ம் ஆண்டில் இருந்து ஜப்பான் இந்த ஆணையத்தின் உறுப்பினராக இருந்துவந்த நிலையில் தற்போது அதிவிலிருந்து வெளியேறியுள்ளது.
இதேவேளை திமிங்கிலங்களை உண்பது ஜப்பான் பண்பாட்டின் ஓர் பகுதி என இந்த ஆணையகத்தின் உறுப்பினரான ஜப்பான் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பல ஆண்டுகளாக அறிவியல் ஆராய்ச்சிக்கு என திமிங்கிலங்களைப் பிடித்த ஜப்பான் அவற்றின் இறைச்சியை விற்றும் வந்த நிலையில் உயிரினப் பாதுகாவலர்கள் இதனை விமர்சித்து வந்தனர்.

இந்தநிலையில் வணிக ரீதியில் திமிங்கிலங்களைப் பிடிக்கப்போவதாக ஜப்பான் நேற்று புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பினால் மோசமான பின் விளைவுகள் ஏற்படும் என சர்வதேச உயிரினப் பாதுகாப்பு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

எனினும் இந்த அறிவிப்பில் வணிகரீதியான திமிங்கிலப் பிடிப்பு ஜப்பானின் தேசிய கடற்பரப்பிலும், பொருளாதார மண்டலங்களிலும் மட்டுமே நடக்கும் என தெரிவித்துள்ள ஜப்பான் அரச செய்தித் தொடர்பாளர் அண்டார்க்டிக் பகுதியிலும், தென் கோளப் பரப்பிலும் திமிங்கில வேட்டையாடுவதை ஜப்பான் நிறுத்திக்கொள்ளும் எனவும் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More