168
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவி, தான் இயக்கும் முதல் திரைப்படத்தில் யோகி பாபுதான் நாயகன் என்று தெரிவித்துள்ளார். அதுவொரு நனைச்சுவை திரைப்படமாகவே இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

2001இல் கமல்ஹாசன் நடித்து வெளியான படம் ஆளவந்தான் திரைப்படத்தில் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் ஜெயம் ரவி. தற்போது பல்வேறு திரைப்படங்களில் நடித்து வரும் ஜெயம் ரவிக்கு படம் ஒன்றை இயக்க வேண்டும் என்பதே தனது நீண்ட நாள் கனவு.
அது பற்றி கூறியுள்ள ஜெயம்ரவி, இன்னும் சில ஆண்டுகள் கழித்துதான் படம் இயக்குவது பற்றி சிந்திப்பதாகவும் தன் முதல் கதையை எல்லா தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும் வகையில், நகைச்சுவை படமாக இயக்க ஆசைப்படுவதாகவும் கூறியுள்ளார்.
அத்துடன் அந்த திரைப்படத்தில் கதைக்கு யோகி பாபு பொருத்தமாக இருந்தால் அவரை நாயகனாக வைத்து இயக்கப் போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love