கடந்த வாரம் பாராளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்ட முத்தலாக் மசோதா இன்று மாநிலங்களவையில் கொண்டுவரப்படவுள்ளது. மக்களவையில் கடந்த 27ம் திகதி மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் திருத்தப்பட்ட முத்தலாக் தடுப்பு சட்ட மசோதாவைத் தாக்கல் செய்திருந்தார்.
காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், மசோதாவை பாராளுமன்றத் தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன.
இந்த நிலையில் இடம்பெற்ற குரல் வாக்கெடுப்பில் ஆதரவாக 245 வாக்குகளும் எதிராக 11 வாக்குகளும் பதிவாகியதனையடுத்து முத்தலாக் தடுப்பு மசோதா மக்களவையில் நிறைவேறியது
இந்த நிலையில் இன்று மாநிலங்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட இருக்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் தங்கள் உறுப்பினர்களுக்கு அவையில் இருக்கும்படி கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளன.
இதேவுளை மாநிலங்களவையில் முத்தலாக் மசோதாவை தோற்கடித்தே தீருவது என்பதில் காங்கிரஸ் கட்சி தீவிரமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது