ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ ஆகியோரை கொலை செய்ய சதிதிட்டம் மேற்கொண்டமை சம்பந்தமாக ஊழல் எதிர்ப்பு படையணியின் செயற்பாட்டு பணிப்பாளர் நாமல் குமார ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுவதற்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் விடுக்கப்பட்ட கோரிக்கையை அடுத்து நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.
நாமல் குமார கொலைச் சதிதிட்டம் தொடர்பில் பகிரங்கமாக கருத்து வெளியிட்டுக் கொண்டிருப்பதால் விசாரணைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது