அண்மையில் வெளியாகிய ‘துப்பாக்கி முனை’ படத்தின் வெற்றி விழா நிகழ்வை நடிகர் விக்ரம் பிரபு படக்குழுவினருடன் கொண்டாடிள்ளார். இந்த நிகழ்வில் நடிகர் விக்ரம் பிரபுவுடன் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணுவும் கலந்துகொண்டுள்ளார்.
கலைப்புலி எஸ். தாணு இந்தப் படத்தை தயாரிக்க, விக்ரம் பிரபு நடித்த திரைப்படம் ‘தூப்பாக்கி முனை’. இப்படம் வெற்றிகரமாக 25ஆவது நாளை கடந்து பல திரையரங்குகளில் வரவேற்பை பெற்று திரையிடப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் 25ஆவது நாள் வெற்றி விழாவை படக்குழுவினர் எளிமையாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
இந்த விழாவில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, துப்பாக்கி முனை திரைப்படத்தின் ஹீரோ விக்ரம் பிரபு, இயக்குநர் தினேஷ் செல்வராஜ், ஒளிப்பதிவாளர் ராசாமதி, இசையமைப்பாளர் எல்.வி.முத்து கணேஷ், படத்தொகுப்பாளர் புவன் ஸ்ரீநிவாசன், டிசைனர் பவன், மக்கள் தொடர்பாளர் டைமண்ட் பாபு முதலியோரும் கலந்து கொண்டனர்.
அத்துடன் இத் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த அம்மு அபிராமி. மிர்ச்சி ஷா மற்றும் படத்தில் பணிபுரிந்த அனைவரும் கலந்து கொண்டு துப்பாக்கி முனை திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடியுள்ளனர்.


