Home இலங்கைமடுவில் தமிழர் வீடுகளில் பலவந்தமாக பணம் வசூலித்த பெரும்பான்மையின இளைஞர்கள் நையப்புடைப்பு

மடுவில் தமிழர் வீடுகளில் பலவந்தமாக பணம் வசூலித்த பெரும்பான்மையின இளைஞர்கள் நையப்புடைப்பு

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


தமிழ் மக்களின் வீடுகளிற்கு சென்று பணம் வசூலித்த அனுராதபுரத்தினைச் சேர்ந்த பெரும்பான்மையின இளைஞர்கள் நால்வரை மடுவில் உள்ள மக்கள் நையப்புடைத்த சம்பவம் ஒன்று இன்று திங்கட்கிழமை மதியம் இடம் பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,,

மன்னார், மடு, பெரியபண்டிவிரிச்சான் பகுதியில் உள்ள வீடுகளிற்கு சென்று ஆதரவற்ற குழந்தைகளுக்கு நிதி திரட்டுவதாக கூறி, சில தமிழ் மக்களை மிரட்டி நிதி வசூலித்துள்ளார்.

தாங்கள் அனுராதபுரம் என தங்களை அடையாளப்படுத்திக்கொண்ட இந்த இளைஞர்கள் நால்வர் தொடர்பில் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் துரத்தி பிடித்து நையப்புடைத்துள்ளனர்.

சம்பவத்தை அறிந்து சம்பவ இடத்துக்குச்சென்ற அப்பகுதி கிராம அலுவலர் நடந்த சம்பவத்தை கேட்டறிந்ததுடன், மடு காவல்துறையனருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர் அவர்களை காப்பாற்றும் விதமாக செயற்பட்டதுடன் தமிழ் மக்களை அச்சுறுத்தும் வகையிலும் நடந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More