Home உலகம்காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை தேடி அலைந்த தாய் மரணம்…

காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை தேடி அலைந்த தாய் மரணம்…

by admin

இராணுவத்தினால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை தேடி அலைந்த முல்லைத்தீவை சேர்ந்த சண்முகநாதன் விஜயலட்சுமி என்ற தாயார் இன்று உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவு தேவிபுரம் ‘அ ‘பகுதியை சேர்ந்த 68 வயதுடைய சண்முகராசா விஜயலட்சுமி என்பவரே இவ்வாறு சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.

2009 ஆம் ஆண்டு சண்முகராசா அர்ஜின் என்ற அவரது மகன் முல்லைத்தீவு வலைஞர் மடம் பகுதியில் இராணுவ கட்டுப்பாட்டுக்குள் காணாமல் போயிருந்தார். அன்று தொடக்கம் தனது மகனை தொடர்ந்து தேடி வந்ததோடு பல போராடடங்களிலும் கலந்துகொண்டு தனது மகனை தேடி வந்தார். மகன் காணாமல் போன நாளிலிருந்து மனதளவிலும் உடலளவிலும் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென மரணமடைந்துள்ளார். வடக்கு கிழக்கு பகுதியில் காணாமல் போனவர்களின் உறவுகள் இவருடன் சேர்த்து 19 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவுகள் தமது பிள்ளைகளை தேடி கடந்த வருடம் மார்ச் மாதம் எட்டாம் திகதி ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்று 674-ஆவது நாளாகவும் முல்லைத்தீவில் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More