Home இலங்கைகல்முனையில் பொருத்தப்பட்ட நவீன ஒன்லைன் தொழில்நுட்ப எல்.ஈ.டி தெருமின்விளக்கு தொகுதி :

கல்முனையில் பொருத்தப்பட்ட நவீன ஒன்லைன் தொழில்நுட்ப எல்.ஈ.டி தெருமின்விளக்கு தொகுதி :

by admin
 
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஹரீஸின்  நடவடிக்கையினால் தென் கொரிய நாட்டின் பல்தேசிய கம்பனியான எம்.பி.ஜி குறூப் நிறுவனத்தினால் அன்பளிப்புச் செய்யப்பட்டு கல்முனை பிரதான வீதியில் பொருத்தப்பட்ட நவீன ஒன்லைன் தொழில்நுட்ப எல்.ஈ.டி தெருமின்விளக்கு தொகுதி மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு நேற்று(10) வியாழக்கிழமை கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றகீப் தலைமையில் நடைபெற்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும்; மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸின் அழைப்பின் பேரில் தென் கொரிய நாட்டின் எம்.பி.ஜி குறூப் நிறுவனத்தின் பிரதித் தலைவி ஹென் யூஜின் குறித்த நவீன தெருமின்விளக்கு தொகுதியினை ஒளியூட்டி மக்கள் பாவனைக்கு கையளித்தார்.
இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சரின் பொதுசன தொடர்புகள் அதிகாரி எம்.எஸ். அலிகான் ஸாபி, இராஜாங்க அமைச்சரின் இணைப்புச் செயலாளர் நௌபர் ஏ. பாவா, கல்முனை மாநகர பிரதி முதல்வர் காத்தமுத்து கணேஸ் மற்றும் கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி முக்கியஸ்தர்கள் மற்றும் போராளிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
தென் கொரிய நாட்டின் பல்தேசிய கம்பனியான எம்.பி.ஜி குறூப் நிறுவனத்தினால் கல்முனை மாநகர சபைக்கு அன்பளிப்புச் செய்யப்பட்ட 31 இலட்சம் ரூபா பெறுமதியான நவீன ஒன்லைன் தொழில்நுட்ப எல்.ஈ.டி தெருமின்விளக்குகள் மிகக் குறைந்த மின் நுகர்வினைக் கொண்டதாகவும் அங்கீகரிக்கப்பட்டவர்களின் செல்லிடத் தொலைபேசி ஊடாக இதன் இயக்கப்பாடு மற்றும் பிரகாசத்தின் அளவினை கூட்டி குறைத்தல் போhன்றவற்றை செயற்படுத்தக் கூடிய நவீன தொழில்நுட்பத்தைக் கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்வகையான தெருமின்விளக்குகள் இலங்கையில் முதன் முதலாக கல்முனை நகரில் பொருத்தப்பட்டுள்ளமை விஷேட அம்சமாகும்.
பாறுக் ஷிஹான்
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More