Home இலங்கைபன்னங்கண்டி பிரதேசத்தில் சிறிலங்கா சுதந்திர கட்சி இளைஞர் அணி துப்பரவு பணி

பன்னங்கண்டி பிரதேசத்தில் சிறிலங்கா சுதந்திர கட்சி இளைஞர் அணி துப்பரவு பணி

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


கிளிநொச்சியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பன்னங்கண்டி பிரதேசத்தில் இன்று காலை அங்கஜன் இராமநாதனை தலமையாக கொண்ட சிறிலங்கா சுதந்திர கட்சி இளைஞர் அணியினரால் துப்பரவு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பன்னங்கண்டி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை உள்ளிட்ட பொது இடங்கள் இவ்வாறு துப்பரவு செய்யப்பட்டன. கிளிநொச்சி யாழ்ப்பாணம் மாவட்டத்திலிருந்து இளைஞர் யுவதிகள், பிரதேச சபை உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்டு பன்னங்கண்டி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை வளாகம், பாடசாலை கட்டடங்களிற்கு வர்ணம் பூசுவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்தனர்.

இதேவேளை நாளை தென்னிலங்கையிலிருந்து நாமல் ராஜாபக்ச தலமையிலான குழுவினர் குறித்த பகுதிக்து வருகை தந்து குறித்த பாடசாலை கட்டடத்திற்கு வர்ணம் பூசி மாணவர்களிற்கு கையளிக்கப்படவுள்ளதுடன், பாடசாலை மாணவர்களிற்கான கற்றல் உபகரணங்களும் கையளிக்கப்பட உள்ளதாகவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்துள்ளனர். இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்குடன் குறித்த ஏற்பாடு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More