188
இயக்குனர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் வாட்ச்மேன் திரைப்படத்தின் விளம்பரப் பாடலுக்காக நகைச்சுவை நடிகர் யோகி பாபுவுடன் நடிகை சாயிஷா இணைந்து நடனமாடுகின்றார்.
நயன்தாரா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் கோலமாவு கோகிலா திரைப்படத்தில் இடம்பெற்ற கல்யாண வயசு பாடலுக்கு யோகி பாபுவுடன் நயன்தாராவும் நடித்துள்ளார். இந்த பாடலை வைத்து தயாரிக்கப்பட்ட விளம்பரப் பாடல் பெரும் வரவேற்பை பெற்றது.
இதைப்போன்று வாட்ச்மேன் திரைப்படதிற்கும் யோகி பாபு நடிக்கும் விளம்பர பாடல் ஒன்று உருவாகிறது. விஜய் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வாட்ச்மேன். இந்த படத்தில் வனமகன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமான சாயிஷாவுடனேயே யோகி பாபு இணைந்து நடனம் ஆடுகின்றார்.
ராப் வகை இப் பாடலிற்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ளார். சம்யுக்தா ஹெக்டே இந்த படத்தின் கதாநாயகி. சாயிஷா, சூர்யாவுடன் காப்பான் படத்திலும் நடித்துள்ளார்.
Spread the love