Home இலங்கையாழில் பல பகுதிகளிலும் தொடர்ச்சியாக வழிப்பறி – சங்கிலி அறுப்பில் ஈடுபட்டு வந்த கொள்ளையர் கைது

யாழில் பல பகுதிகளிலும் தொடர்ச்சியாக வழிப்பறி – சங்கிலி அறுப்பில் ஈடுபட்டு வந்த கொள்ளையர் கைது

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் தொடர்ச்சியாக வழிப்பறி மற்றும் சங்கிலி அறுப்பில் ஈடுபட்டு வந்த கொள்ளையர் ஒருவரை சாவகச்சேரி காவல்துறையினர்; நேற்று இரவு கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் மற்றும் தென்மராட்சியின் பல்வேறு பகுதிகளிலும் வழிப்பறி மற்றும் தங்கச்சங்கிலி அறுப்பு போன்றன அண்மைக்காலங்களில் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்தது.

இவ்வழிப்பறி தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர் கொள்ளையர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

இதன்போது வழிப்பறி கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்டு வந்த மோட்டார்ச் சைக்கிள் ஒன்றையும் உருக்கி வைக்கப்பட்டிருந்த ஆறு பவுண் தங்கத்தையும் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

மாவட்ட குற்றப்புலனாய்வு பொறுப்பதிகாரி உப காவல்துறை பரிசோதகர் ஜே.ஜெயறோசனுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய அரியாலைப் பகுதியில் மறைந்திருந்த கொள்ளையரை உப காவல்துறை பரிசோதகர் இ.சேந்தன் தலைமையிலான காவல்துறைக் குழுவினர் கைது செய்துள்ளனர்.

குறித்த கொள்ளையருக்கு எதிராக சாவகச்சேரி காவல் நிலையத்தில் மூன்று முறைப்பாடுகள் உள்ளதாகவும் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக சாவகச்சேரி காவல்துறையினர் தெரிவித்தனர்.

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More