Home இலங்கைமுறிப்பு பகுதியில் 26 வீடுகளிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

முறிப்பு பகுதியில் 26 வீடுகளிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


தேசிய வீடமைப்பு அதிகார சபையின் வீடமைப்பு திட்டத்தின் கீழ் முறிப்பு பகுதியில் 26 வீடுகளிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று பா.ம உறுப்பினர் அங்கயன் இராமநாதன் தலமையில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வு இன்று பகல் 12 மணியளவில் கிளிநாச்சி கரைச்சி பிரதேச செயலர் பிரிவில் உள்ள முறிப்பு பிரதேசத்தில் இடம்பெற்றது.

தேசிய வீடமைப்புக்கான அமைச்சர் சஜித் பிரேமதாசவின் வேலைத்திட்டத்தின் கீழ் குறித்த பகுதியில் 11 வீடுகள் மற்றும் 15 வீடுகளை கொண்ட இரு மாதிரி வீட்டு திட்டங்களை அமைக்கும் வகையில் குறித்த வீடுகளிற்கான அடிக்கல நாட்டும் நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கரைச்சி பிரதேச செயலக திட்டப்பணிப்பாளர், தேசிய வீடமைப்பு அதிகார சபையின் முகாமையாளர், கிராம மட்ட உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More