கடந்த ஒக்டோபரில் ஜாவா கடலில் விழுந்து விபத்துக்குள்ளான லயன் எயார் விமானத்தின் விமானிகள் அறையின் குரல்பதிவுக் கருவி ஒன்று கடற்படையின் நவீன சாதனங்களின்மூலம் இன்று (14.01.19) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இக்கருவி மூலம் மேலும் பல உண்மைகள் தெரிய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது குறித்த விமானம் ஜகார்தாவிலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே ஜாவா கடலில் விழுந்து நொருங்கியதில் அதில் பயணித்த 189 பேர் உயிரிழந்திருந்தனர்.
இது குறித்த விசாரணைகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் விமானிகள் அறையின் குரல்பதிவுக் கருவி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக இந்தோனேசிய கடல்வழி போக்குவரத்து அமைச்சர் ரிட்வான் ஜமாலுதீன் தெரிவித்துள்ளார்
இத்தகவல்கள் குறித்து தேசிய போக்குவரத்து பாதுகாப்பு குழுவின் தலைவரிடம் இன்று காலை தாங்கள் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் இதன்மூலம் விபத்து குறித்த முக்கிய உண்மைகளைக் கண்டறிய முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்