சர்வதேச ஒருநாள் போட்டிகளில் ஒரு அணிக்கு எதிராக அதிகமான சிக்ஸர்கள் அடித்த மேற்கிந்திய தீவுகள் அணியின் கிறிஸ் கெயிலின் சாதனையை இந்திய வீரர் ரோஹித் சர்மா முறியடித்துள்ளார்.
இந்திய அணியின் துணைத்தலைவரான ரோஹித் சர்மா அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் 52 பந்துகளுக்கு 43 ஓட்டங்களை எடுத்தநிலையில் ஆட்டமிழந்திருந்தார். இந்தப் போட்டியில் ரோஹித் சர்மா 2 சிக்ஸர்கள் அடித்ததன் மூலம் ஒரு அணிக்கு எதிராக 89 சிக்ஸர்கள் அடித்து அதிகமான சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
இதற்கு முன் மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர் கிறிஸ் கெயில் மட்டுமே இங்கிலாந்து அணிக்கு எதிராக 88 சிக்ஸர்கள் அடித்து, ஒரு அணிக்கு எதிராக தனி வீரர் ஒருவர் அடித்த அதிக சிக்ஸர் என்ற பெருமையை வைத்திருந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது