ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா தொடர்ந்தும் இணைந்திருக்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் டொனால்ட் டஸ்க் ஆலோசனை வழங்கியுள்ளார்.
பிரித்தானிய பிரதமர் தெரேசா மேயின் பிரெக்ஸிற் ஒப்பந்தம், பாராளுமன்றத்தில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, டொனால்ட் டஸ்க் இவ்வாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.
ஒப்பந்தத்துக்கான சாத்தியமில்லாத மற்றும் ஒப்பந்தத்துக்கு எவரும் தயாரில்லாத நிலையில், அனுகூலமான பதில் என்ன எனத் தெரிவிக்கும் தைரியம் யாருக்கு உள்ளது என டொனால்ட் டஸ்க் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதேவேளை, பிரெக்ஸிற் ஒப்பந்தம் தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில், பிரித்தானியாவின் நிலைப்பாட்டை அறிவிக்குமாறு ஐரோப்பிய தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பிரெக்ஸிற் ஒப்பந்தம் தொடர்பில் பிரித்தானிய கீழ்சபையின் நடாத்தப்பட்ட வாக்கெடுப்பு தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில், தெரேசா மே கடும் நெருக்கடிகளை சந்தித்துள்ள அதேவேளை, அவருக்கு எதிராக மற்றுமொரு நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்தப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று இடம்பெறவுள்ள நிலையில் குறித்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றிபெற்றால் அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.