பிரபல கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை எனவும் அதனை தேர்தலில் போட்டியிட விரும்பும் நபர்களுடன்தான் பேச வேண்டும் எனவும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்தின தெரிவித்துள்ளார்..
அவருடன் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் பேசுவதற்கு அவருக்கும் தனக்கும் தலையில் கோளாறில்லை என்பதுடன் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குமாறு சங்கக்காரவிடம் கோரவில்லை எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் கருத்து தெரிவித்தபோதே இதனைத் தெரிவித்துள்ள ராஜித இந்த தகவல் பொய்யான தகவல் எனவும் தெரிவித்துள்ளார்.
சங்கக்காரவுடன் வெறும் பத்து நிமிடம் மாத்திரமே பேசியதாகவும் அவருடன் சுகாதார சேவைகளின் விரிவாக்கம் தொடர்பில் உரையாடியதாகவும் அதனை புதிய அரசில் சாத்தியப்படுத்துவது தொடர்பில் தாம் விளக்கம் அளித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
1 comment
சங்கக்கார உள்ளாட்சி, மாகாணசபை, பாராளுமன்றம் ஆகிய எதனிலும் உறுப்பினராகி அனுபவப்படவில்லை. இவரைப்பற்றிய செய்திகளைப் போட்டு எங்கட நேரத்தை ஏன் ஐயா வீணாக்குகிறீர்கள்.