Home உலகம்கமரூனில் கடத்தப்பட்ட 36 பேரும் விடுவிப்பு…

கமரூனில் கடத்தப்பட்ட 36 பேரும் விடுவிப்பு…

by admin


கமரூனின் தென்மேற்கு பிராந்தியத்தில் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட பயணிகள் 36 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் நெடுஞ்சாலையில் சென்ற பயணிகள் பேருந்தை தடுத்து நிறுத்திய ஆயுதம் தாங்கிய குழுவொன்று அதில் பயணித்த 36 பயணிகளையும் கடத்தியிருந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கடத்தப்பட்ட 36 பேரும் நேற்றையதினம் விடுவிக்கப்பட்டுள்ளனர். நீண்டதூரம் தங்களை கடத்தல்காரர்கள் சேர்ந்தவர்கள் அழைத்துச் சென்றதாகவும், தங்களிடம் இருந்த பணம், கைத்தொலைபேசி மற்றும் பொருட்களை பறித்துக்கொண்டு பின்னர் விடுவித்ததாகவும் பயணிகள் தெரிவித்துள்ளனர்.

ஆங்கிலம் பேசும் மக்கள் அதிகம் வாழும் தென்மேற்கு மற்றும் வடமேற்கு பிராந்தியங்களை தனி சுதந்திர நாடாக அறிவிக்க வலியுறுத்தி, பிரிவினைவாத அமைப்புகள் அங்கு ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More