தென்னிந்தியாவில் சமூகம் சார்ந்த மத அமைப்பின் தலைவர்களை கொல்ல சதி செய்ததாக, டெல்லியில் 3 பேரை கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளர். குடியரசு தின விழாக்கள் மற்றும் அணிவகுப்பு நடைபெறும் இடங்களில் பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில் குடியரசு தின விழாவை சீர்குலைக்கும் வகையில், தென்னிந்தியாவில் சமூகம் சார்ந்த மத அமைப்புகளின் தலைவர்கள் மீது தாக்குதல் நடத்த ஒரு குழு சதி செய்திருப்பதாக டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
விசாரணையில் அவர்களில் ஒருவர் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர் எனவும் ஏனையவர்கள் டெல்லி மதாங்கிர் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது