அம்பாறையில், இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த அரச மற்றும் தனியார் காணிகள் 39 ஏக்கரை விடுவித்திருப்பதாக இராணுவ ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்பிற்கு அமைவாகவே விடுவித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர்க்காலத்தில், இராணுவ முகாங்கள் அமைப்பதற்காகவே இந்தக் காணிகள் பயன்படுத்தப்பட்டதாகவும் தற்போது மக்களின் பாவனைக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புப் படையின் கிழக்கு தளபதி மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவின் கண்காணிப்பில், அம்பாறை மாவட்ட செயலகத்தில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக இராணுவத்தின் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இதனடிப்படையில், அம்பாறை – கல்முனை பிரதேச செயலகப் பிரிவின் பெரிய நீலாவணை பகுதியில், அரை ஏக்கர் தனியார் காணியும் பள்ளக்காடு பகுதியில் 39 ஏக்கர் அரச காணியும் விடுவிக்கப்பட்டுள்ளன.