Home இலங்கைகூட்டமைப்பு அரசின் பங்காளியாக மாற வேண்டும்

கூட்டமைப்பு அரசின் பங்காளியாக மாற வேண்டும்

by admin

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ள முன்வரவேண்டும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க அழைப்பு விடுத்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே அவர் இந்த அழைப்பை விடுத்துள்ளார்.

புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர் புதிய அரசியலமைப்பை கொண்டு வருவதானால் மாத்திரம் இலங்கையின் பிரச்சினைகள் தீர்ந்துவிடாது எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அரசின் பங்காளிகளாக மாற வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

இந்த அடிப்படையில் மக்களின் கவலைகளை தீர்க்கும் முகமாகவும் மக்களுக்கு சேவையாற்றும் முகமாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர், அரசாங்கத்தில் இணைந்து அமைச்சுப் பதவிகளை பொறுப்பெடுக்க வேண்டும் எனவும் சம்பிக்க ரணவக்க மேலும் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More