Home பிரதான செய்திகள்அலிஸ்டயர் குக் அணித் தலைமைப் பதவியை விட்டு விலகுவார்

அலிஸ்டயர் குக் அணித் தலைமைப் பதவியை விட்டு விலகுவார்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


இங்கிலாந்து அணியின் தலைவர் அலிஸ்டயர் குக் அணித் தலைமைப் பதவியை விட்டு விலகுவார் என முன்னாள் தலைவர் மைக்கல் வோகன் தெரிவித்துள்ளார். 31 வயதான குக் தலைமையிலான இங்கிலாந்து அணி அண்மையில் இந்திய அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் நான்குக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் தோல்வியடைந்திருந்தது.

குக்கின் இறுதி மூன்று போட்டிகளை அவதானிக்கும் போது, பதவி விலக்கூடிய சாத்தியம் அதிகளவில் காணப்படுவதாக தென்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். அணித் தலைமை பதவியை விடுவதா இல்லையா என்பது குறித்து இன்னும் குக் இறுதித் தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். சில காலம் எடுத்து தீர்மானம் பற்றி சிந்தித்து நடவடிக்கை எடுப்பது பொருத்தமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More