Home இலங்கைஅதிகார அமைச்சர் பதவியொன்றினை சுதந்திரக் கட்சி எதிர்க்கின்றது – சந்திம வீரக்கொடி

அதிகார அமைச்சர் பதவியொன்றினை சுதந்திரக் கட்சி எதிர்க்கின்றது – சந்திம வீரக்கொடி

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

அதிகார அமைச்சர் பதவியொன்றினை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதிர்ப்பதாக பெற்றோலிய வள அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். மித மிஞ்சிய அதிகாரங்களுடன் கூடிய அதிகார அமைச்சர் பதவி உருவாக்கப்படும் நடவடிக்கையை கட்சி எதிர்க்கின்றது என குறிப்பிட்டுள்ள அவர் இவ்வாறான ஓர் முயற்சிக்காக சட்டங்கள் இயற்றப்பட்டால் அதனை சுதந்திரக் கட்சி எதிர்க்கும் எனவும்  இவ்வாறான அதிகார அமைச்சர்களை உருவாக்கியே கடந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தோல்வியைத் தழுவினார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் நாட்டுக்கு முதலீடுகளை கொண்டு வரவும், அபிவிருத்தியை மேற்கொள்ளவும் புதிய சட்டங்கள் கொண்டு வரப்பட்டால் அதனை ஆதரிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More