சென்னை-தூத்துக்குடி இடையே 13 ஆயிரத்து 200 கோடி ரூபாய் பெறுமதியில் 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த இந்திய மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. சென்னை-தூத்துக்குடி துறைமுகங்களை இணைக்கும் வகையில், சென்னை-தூத்துக்குடி இடையே புதிதாக 8 வழிச்சாலை திட்டத்த்னை செயல்படுத்துவதற்கே இவ்வாறு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, அண்மையில் தமிழக அரசுடன் மத்திய சாலை போக்குவரத்து துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தமிழக அரசும் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தற்போது, 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஆயத்தப்பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
சென்னை-தூத்துக்குடி இடையே நிறைவேற்றப்படும் இந்த திட்டத்தில், சென்னையில் இருந்து விழுப்புரம் வரை 10 வழிச்சாலையாக அமைக்கப்பட இருக்கிறது. இந்த புதிய சாலை அமைவதன் மூலம் சுமார் 100 கிலோ மீற்றர் அளவுக்கு பயண தூரம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.