போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு வரும் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளைக் கண்டறிந்து, அவர்களைக் கைது செய்து, சிறையிலடைக்க திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
புதிய ஓய்வு ஊதியத் திட்டம், ஊதிய முரண்பாடுகள், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தொடர்ந்து நான்காவது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில் அனைத்து மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளுக்கும் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கு ஆணைப் பிறப்பித்துள்ள பாடசாலை கல்வித் துறை பணிக்கு வராதமை குறித்து விளக்கமளிக்குமாறும் ஆணை அனுப்பியுள்ளது.
இதன் மூலம், ஊதியம் பிடித்தம் அல்லது பணியிடை நீக்கம் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுத் தேர்வு நெருங்கும் சந்தர்ப்பத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போராட்டத்தால் தமிழகம் முழுவதும் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன,
இதனையடுத்து போராட்டத்தில் முன்னணியில் இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. போராட்டக்காரர்களுக்குப் பின்னால் திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இருக்கிறது எனவும், அதில் முக்கியமான நிர்வாகிகளைக் கண்டறிந்து அவர்களை பணியிலிருந்து நீக்குவதற் மேலிடம் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்தநிலையில் களமிறங்கிய மாவட்ட உளவுத் துறை அதிகாரிகள் மறியல் போராட்டம் செய்தவர்களில் முக்கியப் பொறுப்பாளர்களின் தகவல்களை எடுத்து சிபிஐக்கு அனுப்பியுள்ளதாகவும் இதன்மூலம் தமிழகம் முழுவதும் சுமார் 5,800 ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசு தயாராகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது.
2 comments
do it arrest and imprison them
Take action to eliminate the root cause of the protest