மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தின் 70 சதவீதமான பங்குகளை இந்தியாவுக்கு வழங்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிடம் இலங்கை ஒப்படைத்துள்ள நிலையில் தற்போது, மத்தளயில் சர்வதேச விமான நிலையத்தின் 70 சதவீத பங்குகளை இந்தியாவுக்குவுக்கு வழங்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்தள விமான நிலையம் நஸ்டத்தில் இயங்கி வருவதனால் அதனை இந்தியா 40 ஆண்டுகள் நிர்வகிப்பதுடன் புனரமைக்கும் எனவும் இலங்கை விமான போக்குவரத்து உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளதாகவும் இதுதொடர்பான ஒப்பந்தம் இரு நாடுகளின் விமான நிலைய ஆணையங்களிடையே கையெழுத்தாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.