Home பிரதான செய்திகள்தென்னாபிரிக்காவுக்கெதிரான 4வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி

தென்னாபிரிக்காவுக்கெதிரான 4வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி

by admin

தென்னாபிரிக்காவுக்கெதிரான 4வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றியீட்டியுள்ளது. ஜோகனஸ்பர்கில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பினை தெரிவு செய்த நிலையில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா 41 ஓவரில் 164 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்திருந்தது

இதனையடுத்து, 165 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 31.3 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 168 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியுள்ளது.  இந்த வெற்றியின் மூலம் ஒருநாள் தொடர் 2 – 2 என சமனிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More