278
தொழிலதிபர் சேகர் ரெட்டியின் நண்பர்கள் 3 பேரை இன்று சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அவர்களை ஜனவரி 4ம் திகதிவரை தடுத்து வைக்குமாறு நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.
சேகர் ரெட்டி வழங்கிய தகவல்களின் அடிப்படையில் தலைமைச் செயலாளர் ராம மோகன் ராவ் வீடு, அவரது மகன், உறவினர் வீடுகள் உள்பட 14 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தியிருந்தனர்.
துணை ராணுவத்தின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையில் பல கோடி ரூபாய் பணம், தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சேகர் ரெட்டியின் நண்பா்கள் 3 பேர் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
Spread the love