அவுஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாகாணத்தில் உள்ள டார்லிங் நதியில் கோடிக்கணக்கில் மீன்கள் இறந்து மிதப்பதால், அந்த நதி வெள்ளை நிறத்தில் காட்சியளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
பல ஆயிரம் கிலோமீற்றர் நீளம் கொண்ட இந்நதியில் மீன்கள் உள்ளிட்ட பல நீர்வாழ் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்ற நிலையில் தற்போது அங்கு கடுமையாக கடுமையான வறட்சி நிலவுவதன் காரணமாக ஆற்றில் உள்ள மீன்கள் உயிரிழந்து மிதக்கத் தொடங்கி உள்ளன.
வெப்பநிலை மாற்றம் மற்றும் ஒக்ஸிஜன் அளவு குறைந்து ஆல்கா நச்சாக மாறியதால் மீன்கள் சுவாசிக்க இயலாமல் இறந்துள்ளன என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும் சுற்றி இருக்கும் தொழிற்சாலைகளில் இருந்து ஆற்றில் கலக்கும் மாசுதான் மீன்கள உயிரிழப்பதற்கான காரணம் என உள்ளூர் மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
கடுமையான வெப்பநிலை காரணமாக அவுஸ்திரேலியாவில் தாக்கி 40க்கும் மேற்பட்ட குதிரைகள் உயிரிழந்திருந்தன. திடீரென வெப்பநிலை குறைந்ததாலும், பருவகால மழை காலதாமதமாக பெய்ததாலும் அவுஸ்திரேலிய மக்கள் பல சுற்றுச்சூழல் பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர்.
இதே நிலை நீடித்தால், டார்லிங் ஆற்றில் எஞ்சியிருக்கும் மீன்களும் உயிரிழப்பதற்கு வாய்ப்புள்ளதாக அவுஸ்திரேலிய அதிகாரிகள் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.