Home இலங்கைசுஜீவ சேரசிங்கவின் வீட்டிலிருந்து புலிகளின் சீருடை மீட்பு

சுஜீவ சேரசிங்கவின் வீட்டிலிருந்து புலிகளின் சீருடை மீட்பு

by admin
 

ஐக்கிய மக்கள் சக்தியின்  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்  சுஜீவ சேரசிங்கவின் கொள்ளுப்பிட்டி மல் வீதியுள்ள  வீட்டினை  பாணந்துறை வலன ஊழல் எதிர்ப்புப் படை  அதிகாரிகள், சோதனையை மேற்கொண்ட போது  விடுதலைப் புலிகளின் சீருடையின் ஒருதொகுதி மற்றும் V8 ரக வாகனம் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கிடைக்பெற்ற  தகவல் ஒன்றினையடுத்து   பாணந்துறை வலன ஊழல் ஒழிப்புப் பிரிவினா்  கோட்டை நீதவான் நீதிமன்றில் பெறப்பட்ட தேடுதல் உத்தரவின் அடிப்படையில்  காவல்துறை  பரிசோதகர் தலைமையிலான குழு வீட்டுக்குச் சென்றதாகவும்  இதன்போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்  வீட்டில் இல்லை எனவும், வீடு மூடப்பட்டிருந்ததாகவும், ஊழியர் ஒருவரே அங்கு இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுமார் 2 மணிநேரம் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு ஊழியரிடம் வாக்குமூலம் பெறப்பட்டதாகவும்  வீட்டின் பகுதியில் இருந்து  மூன்று பழைய வாகனங்கள் கண்டெடுக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் தான் வீட்டில் இல்லாத நேரத்தில், பாணந்துறை வலான ஊழல் தடுப்புப் படையைச் சேர்ந்தவர்கள் என்று கூறி வந்த சிலர் வீட்டை சோதனைக்கு உட்படுத்தியுள்ளதாகவும்  உண்மையிலேயே காவல்துறை அதிகாரிகளா என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டுமெனவும்  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்  சுஜீவ சேரசிங்க  கொள்ளுப்பிட்டிய  காவல்நிலையத்தில்  முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார்.

இதேவேளை  காவல்துறை   ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை   மா அதிபர், சட்டத்தரணி நிஹால் பதிவா  , பாணந்துறை வலன ஊழல் ஒழிப்பு செயலணியின் அதிகாரிகள் நீதிமன்றத் தேடுதல் உத்தரவுக்கு அமையவே அங்கு தேடுதலை நடத்தியுள்ளதாக தொிவித்துள்ளாா்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More