179
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ். நாவாந்துறைப் பகுதியில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 42 கிலோ கஞ்சாவுடன் இருவரை கொழும்பு விசேட காவல்துறைப் பிரிவினர் கைது செய்துள்ளனர். நாவாந்துறைப் பகுதியிலுள்ள வீடொன்றில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த போதே குறித்த கஞ்சா தொகையை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
காவல்துறையினருக்குக் கிடைத்த தகவலின் பிரகாரம், நேற்றிரவு 7 மணியளவில் குறித்த வீட்டை சுற்றிவளைத்தபோது சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களுடன் கைப்பற்றப்பட்ட கஞ்சாப் பொதிகள் யாழ்ப்பாணம் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
Spread the love