இனவெறிப் பிரச்சினை தொடர்பான குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ள அமெரிக்க வெர்ஜீனியா மாகாண ஆளுனர் ரால்ப் நோர்தம் (Ralph Northam) மன்னிப்புக் கோரியுள்ள போதிலும் பதவி விலக போவதில்லை என தெரிவித்துள்ளார்.
வெர்ஜீனியா மாகாண ஆளுனரான ஜனநாயக கட்சியை சேர்ந்த ரால்ப் நோர்தம் கடந்த 1984-ம் ஆண்டு மருத்துவ கல்லூரியில் படித்த போது எடுத்த புகைப்படம் ஒன்றை சமீபத்தில் வெளியிட்டிருந்தார்.
அதில் கருப்பின வாலிபருடன் மற்றொரு நபர் வெள்ளை நிற ஆடையில் முகத்தை முடிக்கொண்டு நிற்கின்ற போதிலும் அந்த புகைப்படத்தில் இருக்கும் 2 பேரில் தான் யார் என்பதை ரால்ப் நோர்தம் குறிப்பிடவில்லை.
இந்தநிலையில் ரால்ப் நோர்தம் இந்த புகைப்படத்தின் மூலம் இனவெறியை தூண்டுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததுடன அவரை பதவி விலகுமாறு கோரப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த விவகாரத்தில் மன்னிப்பு கோரியுள்ள ரால்ப் நோர்தம் எனினும் இந்த விவகாரத்தில் தான் பதவி விலக போவதில்லை என உறுதியாக தெரிவித்துள்ளார்.