Home இந்தியாபத்மஸ்ரீ விருதை திருப்பி அனுப்பிய மணிப்பூர் இயக்குனர்

பத்மஸ்ரீ விருதை திருப்பி அனுப்பிய மணிப்பூர் இயக்குனர்

by admin

குடியுரிமை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மணிப்பூரைச் சேர்ந்த இயக்குனரான அரிபம் ஷியாம் சர்மா பத்மஸ்ரீ விருதை திருப்பி அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . 83 வயதான அரிபம் ஷியாம் சர் இயக்குனதாரகவும் இசையமைப்பாளராகவும் இருந்து வருகின்ற நிலையில் அவர் பல தேசிய விருதுகளை பெற்றுள்ளதுடன் கடந்த 2006-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி மத்திய அரசு கௌரவித்திருந்தது.

இந்தநிலையில் அவர் தனக்கு வழங்கிய பத்மஸ்ரீ விருதை திருப்பி அனுப்பியுள்ளார். சமீபத்தில் மத்திய அரசு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்த குடியுரிமை சட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

இதற்கு அரிபம் ஷியாம் சர்மா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த சட்டம் அண்டை நாடுகளான பங்களாதேஸ் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து கடந்த 2014 டிசம்பர் 31த் திகதி வரை இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத சமூகத்தினருக்கு அதிவிரைவாக குடியுரிமை வழங்க வழி வகை செய்கிறது.

இதற்கு மணிப்பூர், மேகாலயா உள்ளிட்ட வடகிழக்கு மாநில மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து இந்த விருதை திரும்ப அனுப்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More