திருச்சி திருப்பராய்த்துறை கோயில் சிலை திருட்டு வழக்கில், ஏழு மாதங்களாகத் தலைமறைவாக இருந்த முன்னாள் செயலர் அலுவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுமார் 1,300 ஆண்டுகள் தொன்மையானது திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் உள்ள தாருகாவனேஸ்வரர் கோயிலில் செயல் அலுவலராகப் பணியாற்றிய ஆனந்த்குமார் என்பவரும் மேலும் சலிரும் இணைந்து தொன்மையான அங்காளம்மன் சிலையைத் திருடி விற்றதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
அந்தத் தொன்மையான சிலையைப் போன்று புதிய சிலை செய்து கோயிலில் வைத்ததாகவும், அந்தச் சிலை செய்வதற்காகக் கோயிலில் உள்ள தொன்மையான பாத்திரங்களை உருக்கியதாகவும் அவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டது.
இது தொடர்பில் அவர்கள் கைது செய்யப்படவிருந்தநிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆனந்தகுமார் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து, அவர் தலைமறைவாகியிருந்தார்
இந்தநிலையில் ஏழு மாதங்களாகத் தலைமறைவாக இருந்த ஆனந்தகுமாரை, சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு பிரிவினர் நேற்றையதினம் கைது செய்துள்ளனர்.