Home இலங்கைதிருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இரு இளைஞர்கள் கைது

திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இரு இளைஞர்கள் கைது

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

யாழ்.அரியாலை பகுதியில் திருட்டில் ஈடுபட்டனர் எனும் குற்றசாட்டில் இரண்டு இளைஞர்களை யாழ்ப்பாண காவல்துறையினர்   கைது செய்துள்ளனர்.

அரியாலை பூமங்குளம் பகுதியில் உள்ள வீடொன்றில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் உட்புகுந்த திருடர்கள் பணம் மற்றும் 16 பவுண்நகைகளை களவாடி சென்றிருந்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் வீட்டின் உரிமையாளரால் யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர் அரியாலை பகுதியை சேர்ந்த இரு இளைஞர்களை நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் களவாடப்பட்ட நகைகளை யாழ்.நகர் பகுதியில் உள்ள நகைக் கடை ஒன்றில் உருக்கியுள்ளதாக தெரியவந்துள்ளதாகவும் , தொடர்ந்தும் சந்தேகநபர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக யாழ்ப்பாண காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More