Home இலங்கைநீதி­மன்­றுக்கு ஒழுக்கமாக சமூகமளிக்க வேண்டும்…..

நீதி­மன்­றுக்கு ஒழுக்கமாக சமூகமளிக்க வேண்டும்…..

by admin

நீதி­மன்­றுக்கு சமூகமளிப்போர்  நேர்த்­தி­யாக ஆடை அணி­யா­மல், தலை முடி வெட்­டா­மல் என்­ற­வா­றெல்­லாம் ஒழுக்­கம் பேணாது சமூகமளிப்பார்களானால், விளக்க மறியலில்  வைக்­கப்­ப­டு­வர் என யாழ்ப்­பாண நீதி­மன்ற நீதி­வான் ஏ.எஸ்.பி.போல் கண்­டிப்­பான அறி­வு­றுத்­தல் விடுத்­துள்­ளார்.

யாழ்ப்­பா­ணம் நல்­லூர், முட­மா­வ­டி யில் வீடு­களை அடித்து உடைத்­தமை, வாள்­வெட்­டில் ஈடு­பட்­டமை ஆகிய குற்­றச்­சாட்­டில் கைது செய்­யப்­பட்­ட­வர்­கள் மீதான வழக்கு யாழ்ப்­பாண நீதி­வான் மன்­றில் நேற்று விசா­ர­ணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மன்­றில் முற்­படுத்தப்பட்ட சந்­தேக நபர்­கள் நேர்த்­தி­யாக ஆடை­கள் அணி­யாது, தலை முடி வெட்­டாது காணப்­பட்­ட­னர். அவர்­களை அவ­தா­னித்த நீதி­வான் நீதி­மன்­றுக்கு சமூ­கம் அளிக்­கும் போது ஒழுக்க விழு­மி­யங்­க­ளைக் கடைப்­பி­டிக்க வேண்­டும். இனி­மேல் வழக்­குக்­காக நீதி­மன்­றுக்கு­ வரும்­போது நேர்த்­தி­யாக ஆடை­கள் அணிந்து வர­வேண்­டும். நாக­ரி­க­மான முறை­யில் தலை முடி­ வெட்­டி­யி­ருத்­தல் வேண்­டும். ஒழுக்­க­மற்ற முறை­யில் காணப்பட்டால்  சந்­தேக நபர்­கள் விளக்­க­ம­றி­ய­லில் வைக்கப்படுவீர்கள்  என எச்­ச­ரித்­தார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More