Home இலங்கைசுகா­தா­ரத் தொண்­டர்­க­ளா­கப் பணி புரிந்­த­வர்­க­ளில் தகு­தி­யா­ன­வர்­க­ளுக்கு முன்னுரிமை….

சுகா­தா­ரத் தொண்­டர்­க­ளா­கப் பணி புரிந்­த­வர்­க­ளில் தகு­தி­யா­ன­வர்­க­ளுக்கு முன்னுரிமை….

by admin

வட மாகா­ணத்­தில் சுகா­தா­ரப் பணியாளர்கள் வெற்­றி­டங்­க­ளுக்கு, ஆள்­சேர்ப்பு செய்­யப்­ப­டும் நேர்­மு­கத் தேர்­வில், சுகா­தா­ரத் தொண்­டர்­க­ளா­கப் பணி புரிந்­த­வர்­க­ளில் தகு­தி­யா­ன­வர்­க­ளுக்கு முன்னுரிமை வழங்­கப்­ப­டும் என மாகாண சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்ளது.

வடக்கு மாகா­ணத்­தில் சுகா­தா­ரத் தொண்­டர்­க­ளா­கப் பலர் பணி­யாற்­றி­யுள்­ள­னர். இவர்­கள் டெங்­குக் கள தரி­சிப்பு, சுகா­தார மருத்­துவ அதி­காரி பணி­மனை,  மருத்துவமனை போன்­ற­வற்­றில் ஒப்­பந்த அடிப்­ப­டை­யில் தொண்­டர்­க­ளா­கப் பணி­யாற்­றி­ய­வர்­கள்.

அவர்­க­ளின் ஒப்­பந்த காலம் நிறை­வ­டைந்­த­தும் அவர்­கள் அந்த வேலையை நிரந்­த­ர­மாக மேற்­கொள்ள முடி­யாது. அவர்­கள் பணி புரி­யும் இடத்­தில் உள்ள உயர் அதிகாரிகளின்  வேண்­டு­கோ­ளுக்கு இணங்க அதிக காலம் வேலை செய்­த­வர்­கள் உள்­ள­னர்.

இவர்­கள் ஒப்­பந்த காலம் நிறை­வ­டைந்த பின்­னர் வேலை­யற்று இருக்­கின்­ற­னர். அது தொடர்­பில் அர­சி­யல் பிர­மு­கர்­கள் பல­ரும் அர­சின் கவ­னத்­துக்­குக் கொண்டுசென்றனர். அத­ன­டிப்­ப­டை­யில் அரச தலை­வர் செய­ல­கம் சுகா­தா­ரத் தொண்­டர்­க­ளா­கப் பணி­யாற்­றி­ய­வர்­க­ளின் விவ­ரங்­க­ளைத் வழங்மாறு மாகாண அமைச்சுக்குப் பணித்­தது. சுமார் 800 பேரின் விவ­ரங்­கள் அனுப்­பப்­பட்­டன.

அதே­வேளை, தாமும் கட­மை­யாற்­றி­யதாகவும், ஆனால் அர­சுக்கு அனுப்பி வைக்­கப்­பட்ட பெயர்ப் பட்­டி­ய­லில் பெயர் விவ­ரங்­கள் இல்லை என்று நேற்­று­முன்­தி­னம் நடை­பெற்ற ஆளு­ந­ரின் பொது­மக்­கள் சந்­திப்­பில் பலர் சுட்­டிக் காட்­டி­யுள்­ள­னர்.

வடக்கு மாகா­ணத்­தில் சுகா­தா­ரத் தொண்­டர்­க­ளுக்கு சுமார் 400 வரை­யில் வெற்­றி­டங்­கள் காணப்­ப­டு­கி­ன்றன. அந்த வெற்­றி­டங்­க­ளுக்கு ஆள் சேர்ப்பு செய்­யப்­ப­டும் போது சுகா­தா­ரத் தொண்­டர்­க­ளா­கக் கட­மை­யாற்­றிய, அதற்­கான சரி­யான ஆவ­ணங்­க­ளைச் சமர்ப்­பிப்­ப­வர்­கள் நேர்­மு­கத் தேர்­வின் மூல­மா­கத் தேர்வு செய்­யப்­பட்டு அவர்­க­ளுக்­கும் நிரந்­தர நிய­ம­னம் வழங்­கக் கூடிய சந்­தர்ப்­பங்­கள் உள்­ளன. இது தொடர்­பில் மாகாண ஆளு­ந­ரின் கவ­னத்­துக்­குக் கொண்டு வரப்­பட்­டுள்­ளது என்­றும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More