Home சினிமாஅஜித்தின் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகும் ஸ்ரீதேவியின் மகள்

அஜித்தின் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகும் ஸ்ரீதேவியின் மகள்

by admin

 

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் – வித்யாபாலன் – ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கும் அஜித்தின் 59ஆவது திரைப்படத்தின் மூலம் போனி கபூர் – ஸ்ரீதேவியின் மகளும், நடிகையுமான ஜான்வி தமிழில் அறிமுகமாகவுள்ளார்.

இந்தியில் வெளியான பிங்க் என்ற திரைப்படத்தின் மறு உருவாக்கத்தில் அஜித் நடித்து வருகின்றார். ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இந்த படத்தை தயாரிக்க, எச்.வினோத் இயக்குகின்றார். ஸ்ரீதேவி உயிரோடு இருந்தபோது அஜித்தை வைத்து படம் தயாரிக்கவும், அந்த படத்தில் தங்கள் மகள் ஜான்வியை நடிக்க வைக்கவும் விருப்பம் தெரிவித்தார்.

அவர் ஆசையை நிறைவேற்றும் வகையில் முதன்முறையாக போனி கபூர் தயாரிப்பில் மறுஉருவாக்கத் திரைப்படத்தில் அஜித் நடிக்கின்றார். இந்தி பிங்க் திரைப்படத்தின் கதையில் அஜித்துக்காக சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. படத்தில் அஜித்துக்கு நாயகியாக வித்யா பாலன் நடிக்கவுள்ளார். அவருக்கு இத் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இதில் இன்னொரு மாற்றமாக அஜித்துக்கு ஒரு மகள் இருப்பதைப்போலவும் கதையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மகள் கதாபாத்திரத்தில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி நடிக்கவுள்ளார். தடக் என்ற இந்தி படத்தின் மூலம் அறிமுகமான ஜான்விக்கு தமிழில் இது முதல் படமாக அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More