ஜைநீரிய ராணுவம் திடீர் தாக்குதல் நடத்தி போகோ ஹராம் தீவிரவாதிகளின் பகுதிக்குள் நுழைந்து 1880 பொதுமக்களை விடுவித்ததுடன் அதிகளவான தீவிரவாதிகளையும் கைது செய்துள்ளது.
நைஜீரியாவில் அரசுக்கு எதிராக செயற்பட்டு வரும் போகோ ஹராம் தீவிரவாத அமைப்பு நைஜீரியாவின் வடகிழக்கு பிராந்தியமான போர்னோவில்; அதிக அளவில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றது.
கடந்த 2014-ம் ஆண்டு 200-க்கும் மேற்பட்ட பாடசாலை குழந்தைகளை கடத்திச் சென்றதுடன் கிராமங்களுள் புகுந்து மக்களின் பொருட்களை சூறையாடுவதுடன் மக்களை கடத்திச் செல்வதனையும் வழமையாக் கொண்டிருந்தது.
இந்தநிலையில் நைஜீரியா அரச ராணுவம் கடந்த 14ம்திகதி காட்டுப்பகுதிக்குள்ள ராணுவம் நுழைந்து தீவிரவாதிகளை கொன்றதுடன் அவர்கள், பணயக்கைதிகளாக வைத்திருந்த அப்பாவி பொதுமக்களையும் மீட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக நடைபெற்ற இந்த ராணுவ நடவடிக்கையின் போது 1880 பொதுமக்கள் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் 564 போகோ ஹராம் தீவிரவாதிகளை கைது செய்துள்ளதாக அரச தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.