படைப்புழுவின் தாக்கம் கட்டுபடுத்தப்பட்டுள்ளதாகவும் எனவே விவசாயிகள் வழமை போல் சோளப் பயிர்ச்செய்கையில் ஈடுபடலாம் எனவும் விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சுமார் 82,000 ஹெக்டேயர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டிருந்த சோளத்தில் 5 சதவீதமே படைப்புழுவின் தாக்கத்தால் அழிவடைந்துள்ளதெனவும் தற்போது படைப்புழுவின்; தாக்கம் கட்டுபடுத்தப்பட்டுள்ளதெனவும் தெரிவித்துள்ள விவசாயத் திணைக்களம் சோள உற்பத்திக்காக புதிய முறைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும் சோளச் செய்கைகளுக்கிடையில் 4 அடி இடைவெளி இருக்க வேண்டுமென்பதுடன், சோளக் கன்றுகளுக்கிடையில் 30 -45 சென்றிமீற்றர் இடைவெளி இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ள திணைக்களம் இதன்மூலம் படைப்புழுவின் தாக்கத்தை குறைத்துக்கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.