குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் முதலமைச்சர்களுக்கும் இடையில் இடம்பெறவுள்ள விசேட சந்திப்பில் கலந்துக் கொள்ளப் போவதில்லை என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
குறித்த சந்திப்பு தொடர்பில் தனக்கு எவ்வித அறிவிப்பும் கிடைக்கப்பெறவில்லை எனத் தெரிவித்த முதலமைச்சர், அறிவிப்பு கிடைக்காமல் எவ்வாறு கலந்து கொள்ள முடியும் என கேள்வி எழுப்பியுள்ளார். மாகாண முதலமைச்சர்களுடனான பிரதமரின் சந்திப்பு இன்றைய தினம் அலரி மாளிகையில்; பிற்பகல் 3.00 மணியளவில் நடத்தப்பட உள்ளது.
விசேட அபிவிருத்தி நியமம் குறித்த சட்ட மூலம் தொடர்பில் முதலமைச்சர்கள், பிரதமரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். மாகாண முதலமைச்சர்களுக்கான அதிகாரங்கள் குறைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் இந்த விடயம் குறித்தும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெளிவுபடுத்த உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.