Home இலங்கைஜாலிய விக்ரமசூரியவிற்கு எதிராக மற்றுமொரு குற்றச்சாட்டு

ஜாலிய விக்ரமசூரியவிற்கு எதிராக மற்றுமொரு குற்றச்சாட்டு

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


அமெரிக்காவிற்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்ரமசூரியவிற்கு எதிராக மற்றுமொரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவிற்கான இலங்கை தூதரகத்தின் ஊடாக முன்னாள் பிரதமர் டி.எம். ஜயரட்னவின் மருத்துவச் செலவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் தனியான வழக்கு ஒன்று தொடரப்படும் என நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் நீதிமன்றில் அறிவித்துள்ளனர். 3லட்சத்து 30ஆயிரம்  அமெரிக்க டொலர் நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாக ஜாலிய விக்ரமசூரிய மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நிதி மோசடி தொடர்பில் முதலீட்டுச் சபையின் தலைவர் உபுல் ஜயசூரிய நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவிற்கு முறைப்பாடு செய்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More