179
ஜம்மு-காஷ்மீரில் இன்று தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்திலுள்ள ஸ்ரீநகர் – ஜம்மு நெடுஞ்சாலையில் விடுமுறை முடிந்து மீண்டும் பணியில் இணைவதற்காக 2500-க்கும் மேற்பட்ட வீரர்கள் 78 வாகனங்களில் சென்று கொண்டிருந்த போது வெடிகுண்டுகள் நிரப்பிய வாகனத்தினால் மோதி இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில் ஒரு வாகனம் முற்றிலும் எரிந்துள்ளநிலையில் அதில் சென்று கொண்டிருந்த 40 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love