நாட்டைப் பற்றியும் நாட்டின் எதிர்காலச் சந்ததியினரைப் பற்றியும் எண்ணிச் செயலாற்றும் தலைவரொருவர், இந்த நாட்டுக்குத் தேவையெனத் தெரிவித்துள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும, இன்று இந்த நாட்டின் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ளக்கூடிய தலைவரொருவரே அவசியமென்றும் இன்னும் 292 நாள்களில், நாட்டை மாற்றக்கூடிய முடிவொன்றை எடுக்கக்கூடியதாக இருக்குமென்று நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
மாத்தறை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், இன்று இந்த நாட்டுக்கு, அரசியல் கட்சியொன்று அவசியமில்லை என்றும் ஒவ்வொரு வர்ணங்களைக் கொண்ட கொடிகளுக்கன்றி, தேசிய கொடிக்கே பிரச்சினை ஏற்பட்டுள்ளதென்றும், அவர் சுட்டிக்காட்டினார்.