இலங்கை இராணுவத்தினர் இறுதிப் போரின்போது போர்க்குற்றங்களை இழைத்தமையை இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக் கொண்ட விடயம் வரவேற்கத் தக்கது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் அக் கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இலங்கை இராணுவம் போர்க்குற்றமிழைத்ததாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக்கொண்டதை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரவேற்பதாகவும் இராணுவத்தினரின் போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கைப் பிரதமர் பகிரங்கமாக, முதன் முதலாக, உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை இறுதி யுத்தத்தில் நடந்த போர்க்குற்றங்களை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள, போர் முடிவடைந்து பத்து ஆண்டுகள் ஆகியுள்ளதாகவும் இலங்கை இராணுவத்தினர் போர்க்குற்றங்கள் எதனையும் இழைக்கவில்லை என்றும் அவர்கள் மனிதாபிமானப் போரில் ஈடுபட்டனர் என்றும் இலங்கை அரசுகள் கூறி வந்ததாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.